ADDED : செப் 22, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை, ஊட்டிக்கு செல்ல மூன்றாவது வழியாக உள்ளதால், இதில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை யானை, மான், காட்டுப்பன்றி, கரடி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி உலா வருவதால், வனத்துறையினர் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனர். கவனமாக செல்ல வாகன ஓட்டிகளை அறிவுறுத்தி வருகின்றனர்.
