ADDED : செப் 22, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
கோவை: தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்(சைமா) ஆண்டு பொதுக்குழு நடந்தது. சங்கத்தின் தலைவராக துரைபழனிசாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக கிருஷ்ணகுமார், உப தலைவராக சிவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அடுத்த ஓராண்டுக்கு இப்பதவியில் இருப்பர்.
பருத்தி மீதான 11 சதவீதம் இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும். சீனா பருத்தி கழகத்தை போல, இந்திய பருத்தி கழகத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
