ADDED : செப் 22, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகரை தவிர்த்து, ஊரகப் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்களுக்கு நவ., 1 முதல் உரிமம் வழங்கப்படும்.
கடை தரைத்தளத்தில் 9 முதல் 25 ச.மீ., பரப்பில் இருக்க வேண்டும். கடைகளுக்கு இடையே குறைந்தது 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், கோயில், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், டீ கடைகள், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் இருந்து 50 மீட்டர் சுற்றளவுக்குள் கடைகளை அமைக்க கூடாது.
உரிம கட்டணம் ரூ.700, உரிய ஆவணங்களுடன் அக்.18க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
