/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.பி.ஐ., கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
எஸ்.பி.ஐ., கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 09, 2024 08:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகத்தை கண்டித்து, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், ரயில் நிலையம் அருகில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கி தலைமை அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார், கவுன்சிலர்கள் சங்கர், சரளா வசந்த் உள்ளிட்ட, 100க்கு மேற்பட்ட கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

