/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
வக்கீல் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 10, 2025 10:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சென்னையை சேர்ந்த வக்கீல் ராஜிவ்காந்தி, ஐகோர்ட் அருகே பைக்கில் சென்றபோது, அவ்வழியாக காரில் வந்த வி.சி.க., நிர்வாகியுடன் தகராறு ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் வக்கீல் தாக்கப்பட்டதாக கூறி, கோவையை சேர்ந்த வக்கீல்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீலை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை, தமிழக அரசு இயற்றக்கோரியும் கோஷம் எழுப்பினர்.