/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 03, 2025 06:10 AM

கோவை: மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, தமிழக கட்டடத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சிலுவை சங்கம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொகுப்பு சட்டங்களால், எட்டு மணி நேர வேலைக்கு பதில், 10 அல்லது, 12 மணி நேர வேலை அமல்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதை மாற்ற வேண்டும்,'' என்றார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மாவட்ட தலைவர் குரூஸ் முத்து பிரின்ஸ் தலைமை வகித்தார். தி.மு.க., முன்னாள்எம்.எல்.ஏ., கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

