/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 21, 2025 08:29 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரக்கன் போன்ற முகமூடி அணிந்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்ட தலைவர் வெற்றிவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார். துணை தலைவர் வீரமுத்து, இணை செயலாளர் இடும்பன், மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க பொருளாளர் மதியரசன், கோட்ட செயலாளர் ஜெகநாதன் பேசினர்.மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
சாலைப்பணியாளர் வாழ்வாதார கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்ற கோரி சென்னையில், கடந்த, 12ம் தேதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற சாலைப்பணியாளர்களை கைது செய்ததை கண்டித்தும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். பொருளாளர் சின்னமாரிமுத்து நன்றி கூறினார்.

