/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 16, 2025 10:49 PM
கோவை; தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய விருதுநகர் மாவட்ட போலீசாரை கண்டித்து, கோவையில் அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், ''விருதுநகர் மாவட்ட காவல்துறையின் செயல், வன்மையாக கண்டிக்கதக்கதாகும்,'' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் சுரேஷ், தமிழ்நாடு அரசு மருத்துவத் துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பிரகலாதா, உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.