/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட பணிகளை புறக்கணித்து போராட்டம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட பணிகளை புறக்கணித்து போராட்டம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட பணிகளை புறக்கணித்து போராட்டம்
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட பணிகளை புறக்கணித்து போராட்டம்
ADDED : செப் 26, 2025 09:23 PM

பொள்ளாச்சி:
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகள் புறக்கணித்து பொள்ளாச்சியில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கங்கள் ஒருங்கிணைந்த வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி தாலுகாவில், வருவாய்துறை அதிகாரிகள், உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை புறக்கணித்து, நேற்று முன்தின் மாலை, 3:00 முதல் இரவு, 8:00 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனைமலை தாலுகாவிலும் இது போன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
*கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் முன், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வருவாய்த்துறை பணியாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் மனுக்களை விரைந்து முடிக்க கோரி, மேல் மட்டத்தில் இருந்து தொடர்ந்து அழுத்தம் வருவதால், வருவாய் துறையினர் அன்றாட பணிகள் செய்ய சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். கருணை அடிப்படையில், தற்போது உள்ள 5 சதவீத பணி நியமனத்தை பழைய படி, 25 சதவீதமாக மீண்டும் கொண்டு வர வேண்டும்.
வேலைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுவதை கைவிட வேண்டும்.
இத்திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும். இவை உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.