sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அரசு மருத்துவமனை சாதாரண வார்டுகளில் ஆறு நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் வேண்டும் அப்படி இல்லாததால் தொடர்கிறது போராட்டம்

ADDED : டிச 23, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:06 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, நான்காவது நாளாக பல நர்சுகள் குழந்தைகளுடன் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், கடந்த 18ம் தேதி, முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நான்காவது நாளான நேற்று, சில நர்சுகள் தங்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கு உணவூட்டினர்.

நர்ஸ்கள் கூறியதாவது:

10 ஆண்டுகளாக பணிபுரிந்தும், நிரந்தரம் செய்யவில்லை. அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையை போக்கவே, நாங்கள் பணியமர்த்தப்பட்டோம். அதன் பின்னரும் ஏராளமானோர் ஓய்வு பெற்றனர். அவர்களது பணியையும் சேர்ந்து நாங்கள் செய்தோம்.

விதிமுறைப்படி, சாதாரண வார்டுகளில் ஆறு நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ், அவசர சிகிச்சை பிரிவில் இரு நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் வீதம் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் அப்படி இல்லை. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்.

நிரப்பப்படாத பணியிடங்களால் எங்களுக்கு அதிக பணிப்பளு உள்ளது. இரு நர்ஸ்கள் பார்க்க வேண்டிய பணியை, ஒரே நர்ஸ் பார்க்கிறார். இதனால் பல இன்னல்களை சந்திக்கிறோம்.

ஆனால், எங்கள் அத்தியாவசிய தேவையை கூட செயல்படுத்த, அரசு யோசிப்பது ஏன் எனத் தெரியவில்லை.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்துக்கு, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க நிர்வாகி பியூலா தலைமை வகித்தார். முன்னதாக, பா.ஜ., மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், போராட்டத்தில் ஈடுபட்ட நர்ஸ்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர்.

விதிமுறைப்படி, சாதாரண வார்டுகளில் ஆறு நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ், அவசர சிகிச்சை பிரிவில் இரு நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் வீதம் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் அப்படி இல்லை. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்.

      Dinamalar
      Follow us