/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுமனை பட்டா கோரி போராட்டம்
/
வீட்டுமனை பட்டா கோரி போராட்டம்
ADDED : பிப் 19, 2026 06:03 AM

கோவை: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், தொண்டாமுத்துார் பகுதி பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி, கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க தலைவர் ராஜன் தலைமை வகித்தனர்.
மனுவில், 'தொண்டாமுத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 10 கிராமங்களில் உள்ள ஏழை எளிய ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள்,திருமணமான மூன்று குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். சாலை ஓரம், நீர்நிலைப்புறம்போக்கு பகுதிகளிலும் வசிக்கின்றனர். இவர்களுக்கு வீடு கட்ட அரசு புறம்போக்கு இடங்களில் ஐந்து சென்ட் மனையிட பட்டா வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

