/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
/
பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2025 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை லேபர் யூனியன் ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். துாய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், துாய்மைப் பணியில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.
ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., சங்க நிர்வாகிகள் செல்வராஜ், ரத்தினகுமார், ராஜாக்கனி, சமூக நீதி சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.