/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய்கள் கருத்தடை மையத்தை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்
/
நாய்கள் கருத்தடை மையத்தை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்
நாய்கள் கருத்தடை மையத்தை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்
நாய்கள் கருத்தடை மையத்தை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 29, 2025 08:49 PM
கோவை; கோவை மாநகராட்சி சார்பில், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நாய் கருத்தடை மையம் செயல்படு கிறது. இக்கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, எஸ்.டி. பி.ஐ., கட்சியினர் நேற்று மையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்துார் வடக்கு தொகுதி தலைவர் முகமது காசிம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'இங்கு கருத்தடை செய்யப்படும் நாய்கள் இதே பகுதியில் விடப்படுவதால் மாநகராட்சி, 82, 84, 86வது வார்டு பகுதிகளில் நாய்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பயத்துடன் நடமாட வேண்டியுள்ளது. கருத்தடை மையத்தை இடமாற்ற வேண்டும்' என, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட தலைவர் முகமது இசாக், அமைப்பு பொதுச்செயலாளர்இப்ராஹிம் பாதுஷா உட்பட பலர் பங்கேற்றனர்.