/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிக்கம்பத்தை அகற்ற கோரி போராட்டம்
/
கொடிக்கம்பத்தை அகற்ற கோரி போராட்டம்
ADDED : டிச 24, 2024 10:24 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, இம்மிடிபாளையம் கிராமத்தில் பொதுஇடத்தில் உள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற கோரி, வார்டு கவுன்சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிணத்துக்கடவு, இம்மிடிபாளையம் பகுதியில் குழந்தைகள் நல மையம் அருகே, பொது பாதையில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழித்தடம் குறுகலாக உள்ளது. மக்களுக்கும் இடையூறாக உள்ளது.
இதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் கொடிக்கம்பங்களை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இதை தொடர்ந்து, அரசு அதிகாரிகள் கொடிக்கம்பதை அகற்ற காலதாமதப்படுத்துவதால், சொலவம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், மணி மற்றும் இவரது மனைவி 9வது வார்டு கவுன்சிலர் கவிதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, கொடிக்கம்பம் அகற்றப்படும் எனக்கூறி அனுப்பி வைத்தனர்.

