/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 16, 2025 09:21 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அரசு மகளிர் பள்ளி செல்லும் வழியில் உள்ள, டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற கோரி, சி.ஐ.டி.யு., பொது தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த மதுக்கடைகளால் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது.இந்த மதுக்கடைகளை அகற்றக் கோரி, மேட்டுப்பாளையம் தாலுகா சி.ஐ.டி.யு., பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது.இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லாததால், டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சி.ஐ. டி.யு., பொது தொழிலாளர் சங்கத்தினர், கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொழிற்சங்கத்தினர் அண்ணாஜி ராவ் சாலையில் இருந்து, அண்ணா மார்க்கெட் வழியாக, ஊர்வலமாக பஸ் ஸ்டாண்டை வந்தடைந்தனர். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொழிற்சங்க பொது செயலாளர் பாஷா தலைமை வகித்தார். 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.