/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
காங். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 22, 2025 05:16 AM

பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட காங். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சியில் நடந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்க நினைப்பதையும், நேஷனல் ெஹரால்டு வழக்கில் எம்.பி. சோனியா, ராகுல் ஆகியோர் மீது களங்கம் விளைவிக்கும் மத்திய அரசைக்கண்டித்து, கோவை தெற்கு மாவட்ட காங். கட்சி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடந்தது.
மாவட்டத்தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். எச்.எம்.எஸ். தொழிற்சங்க தலைவர் ராஜாமணி, முன்னாள் மாவட்டத்தலைவர் பகவதி, நகர காங். கட்சித்தலைவர்கள் செந்தில்குமார், அமீர் மற்றும் பலர் பங்கேற்றனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

