ADDED : செப் 18, 2026 07:53 PM
அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலை தற்காலிக ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் பேசிய பதிவாளர் ராஜவேல், இனி வழங்கப்படும் ஊதியத்தில் இ.எஸ்.ஐ., அபராதத் தொகை பிடித்தம் செய்யப்படாது என்றும், இரு மாதங்களில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, நிதிக்குழு ஒப்புதல் பெற்று திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற 20 நாட்கள் அவகாசம் கேட்டார். தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
