/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை சீரமைக்காவிட்டால் போராட்டம்
/
ரோட்டை சீரமைக்காவிட்டால் போராட்டம்
ADDED : ஜூலை 15, 2025 08:28 PM
வால்பாறை; கிடப்பில் உள்ள சக்தி எஸ்டேட் ரோட்டை சீரமைக்காவிட்டால், நகராட்சியை கண்டித்து விரைவில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என, பா.ஜ., தெரிவித்துள்ளது.
பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட சக்தி - தலநார் எஸ்டேட் அமைந்துள்ளது. வால்பாறையிலிருந்து தலநார் எஸ்டேட் பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீஸ் வரை அரசு பஸ் இயக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப்பகுதியில் ரோடு பழுதானதாக கூறி தலநார் கடைப்பாடி என்ற இடம் வரை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது.இதனால் சக்தி, பிளண்டிவேலி, சண்முகா உள்ளிட்ட எஸ்டேட் பகுதியை சேர்ந்த மக்கள் 3 கி.மீ., துாரம் வரை நடந்தே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
15 நாட்களுக்குள் சக்தி எஸ்டேட் ரோட்டை நகராட்சியினர் சீரமைக்காவிட்டால், மக்களை திரட்டி கவர்க்கல் - பொள்ளாச்சி ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

