/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 31, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்டில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணை, 140யை திரும்ப பெற வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை கோர்ட் உத்தரவுப்படி பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் பதாகைகளை ஏந்திய படி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.