/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டிட்டோ - ஜாக் சார்பில் மறியல் போராட்டம்
/
டிட்டோ - ஜாக் சார்பில் மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 18, 2025 09:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின், கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டமும் நடந்தது. போராட்டத்துக்கு, டிட்டோ - ஜாக் சார்பில் மாவட்ட தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.