/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிங்காநல்லுாரில் ரயில்கள் நிற்க கோரி போராட்டம்
/
சிங்காநல்லுாரில் ரயில்கள் நிற்க கோரி போராட்டம்
ADDED : மார் 17, 2024 01:16 AM
கோவை;சிங்காநல்லுார் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என கோரி, அந்த பகுதி ரயில் பயனாளர்கள், பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதில் பங்கேற்ற போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
கோவை சிங்காநல்லுார் ஸ்டேஷனை கடந்து செல்லும், ஒரு சில ரயில்களை தவிர வேறு எந்த ரயில்களும் இங்கு நிற்பதில்லை. இங்கிருந்து திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் பகுதிக்கு வேலைக்கு செல்பவர்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.
கொரோனாவுக்கு முன், இந்த ஸ்டேஷனில் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் உட்பட பல ரயில்கள் நின்று சென்றன. கொரோனாவுக்கு பிறகு நிற்பதில்லை. எப்போதும் போல் ரயில்கள் இங்கு நின்று செல்ல, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

