/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் முறையாக வழங்க கோரி காலி குடங்களுடன் மறியல்
/
குடிநீர் முறையாக வழங்க கோரி காலி குடங்களுடன் மறியல்
குடிநீர் முறையாக வழங்க கோரி காலி குடங்களுடன் மறியல்
குடிநீர் முறையாக வழங்க கோரி காலி குடங்களுடன் மறியல்
ADDED : ஜன 15, 2026 06:53 AM

ஆனைமலை: ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சியில் குடிநீர் முறையாக வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆனைமலை அருகே, அங்கலகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 15,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குடிநீர் தேவைக்காக, 2 கோடியே, 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக ஆழியாறில் இருந்து, அங்கலகுறிச்சி வரை குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அங்கலகுறிச்சி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் வினியோ கிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி குடிநீர் இல்லாமல் அவதிப்படுவதாக அங்கலகுறிச்சி பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே, பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், 50க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஆழியாறு போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து, மறியலில் கைவிடப்பட்டது. இன்று இரவுக்குள் குடிநீர் வழங்காவிட்டால் மீண்டும் மறியலில் ஈடுபடுவோம், என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

