/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் கைது
/
ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் கைது
ADDED : மார் 22, 2025 12:06 AM
கோவை; பஞ்சாப் விவசாயிகளைக் கைது செய்ததைக் கண்டித்து, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில், கோவை ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் பாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'பஞ்சாப் மாநிலத்தில், வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக்கோரி, விவசாயிகள் போராடி வந்தனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், விவசாயத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. அவர்களை உடனே விடுதலை செய்து, பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும். குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்' எனக் கோரி, கோஷம் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை, ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.