/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதிப்புக்கூட்டு பொருட்களுக்கு மானியம் கொடுங்க! தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்
/
மதிப்புக்கூட்டு பொருட்களுக்கு மானியம் கொடுங்க! தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மதிப்புக்கூட்டு பொருட்களுக்கு மானியம் கொடுங்க! தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மதிப்புக்கூட்டு பொருட்களுக்கு மானியம் கொடுங்க! தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2025 08:12 PM
பொள்ளாச்சி; தென்னை நார் உற்பத்தியாளர்கள், இன்று சிறு, குறு நடுத்தர அமைச்சர் சந்திப்பு நிகழ்ச்சியில், மதிப்புக் கூட்டப்பட்ட நார் பொருட்கள் தயாரிப்புக்கு மானியம் வழங்க வேண்டும், என வலியுறுத்த உள்ளனர்.
தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஏழாயிரம் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவில் இருந்து, ஆண்டுதோறும், 9.81 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், தமிழகத்தில் இருந்து மட்டும், ஆறு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது. இதில், 90 சதவீதம் சீனாவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தென்னை நார் உற்பத்தியாளர்களை சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
நாடுமுழுவதும், 54 கூட்டுக்குழுமங்கள் உள்ளன. அதில், 16க்கும் மேற்பட்ட கூட்டுக்குழுமங்கள் தமிழகத்தில் உள்ளன.கடந்த, 11 ஆண்டுகளில், மத்திய அரசு தென்னை நார் உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
தென்னை நார் உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பொருட்களை காட்சிப்படுத்த, விற்பனை செய்வதற்கு மத்திய அரசு உதவுகிறது. மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கு, கூட்டுக்குழுமங்களை அதிகரிக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
கடந்த, 1953ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட கயிறு வாரிய சட்டத்தில் மாற்றங்கள் செய்து தொழிலை முன்னேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சிறு, குறு நடுத்தர அமைச்சக இணை அமைச்சர் இன்று (11ம் தேதி) பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தியாளர்களை சந்திக்க உள்ளார். தமிழகத்தில் உள்ள தென்னை நார் உற்பத்தியாளர்களும் பங்கேற்க உள்ளனர்.
திப்பம்பட்டியில், உலக தரம் வாய்ந்த ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான மானியம் வழங்குதல், மண்ணில்லா விவசாயத்துக்கு ஊக்கம் கொடுப்பதற்காக தனித்திட்டம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.