/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழில் பயிற்சி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
தொழில் பயிற்சி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
தொழில் பயிற்சி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
தொழில் பயிற்சி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஆக 25, 2025 09:22 PM

வால்பாறை; அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
வால்பாறை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், எலக்ட்ரீசியன், பிட்டர், பேசன் டிசைன், டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ் நான்கு பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தமுள்ள 104 இடங்களுக்கு, 47 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இம்மாதம் 31ம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கை நடக்கவுள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, தொழில் பயிற்சி நிலைய அலுவலர்கள், எஸ்டேட் பகுதி மக்கள், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த கல்வியாண்டில் பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் சேர்ந்துள்ள, 47 மாணவ, மாணவியர்களுக்கு, அரசின் சார்பில் வழங்கப்படும் சீருடை, புத்தகங்கள் வழங்கும் விழா முதல்வர் நடராஜ் தலைமையில் நடந்தது. தொழில்பயிற்சி நிலைய இளநிலை பயிற்சி அலுவலர் வெங்கடேஷ் வரவேற்றார்.
விழாவில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி பேசியதாவது:
வால்பாறையில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், தமிழக அரசின் சார்பில் கடந்த 2022-23ம் கல்வியாண்டு முதல் அரசினர் தொழில் பயிற்சி நிலையம் துவங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
வரும் காலங்களில், எட்டம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும், தொழில் பயிற்சியில் சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படிக்கும் வயதில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாக கூடாது.
எதிர்காலம் சிறப்பாக அமைய தொழில் பயிற்சியில் சேர்ந்து, நன்றாக படித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
விழாவில், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வம், தொழிற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

