/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்
/
குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்
ADDED : அக் 21, 2025 10:38 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு அமைப்புகள் இதையொட்டி ஏழைகளுக்கு சேவைகள் செய்து வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ஆழியாறு தாய் அன்பாலயத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
குழந்தைகள் புத்தாடைகளை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை வகித்து, புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகளை குழந்தைகளுக்கு வழங்கினார்.மாவட்ட காங். தலைவர் சக்திவேல், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சபரி கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.