/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெகமத்தில் பயணியர் அமரும் இருக்கையை சூழ்ந்த புதர்
/
நெகமத்தில் பயணியர் அமரும் இருக்கையை சூழ்ந்த புதர்
ADDED : அக் 21, 2025 10:38 PM

நெகமம்: நெகமம் மின் வாரிய அலுவலகம் முன் உள்ள, பஸ் ஸ்டாப் பயணியர் இருக்கையை புதர் சூழ்ந்திருப்பதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
வடசித்துார் - நெகமம் வழித்தடத்தில் உள்ள, மின்வாரிய அலுவலக வளாகத்தின் முன், பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த மின்வாரிய அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தினமும் இந்த பஸ் ஸ்டாப்பில் நின்று, ஏராளமான பொதுமக்கள் பஸ் ஏறிச்செல்கின்றனர்.
தற்போது இதில், பயணிகள் அமரும் இருக்கை சுற்றிலும் புதர் சூழ்ந்து இருப்பதால், மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஸ்டாப்பில் அமர முடியாத சூழல் உள்ளது.
சில நேரங்களில், இப்பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால், மக்கள் பலர் இங்கு அச்சத்துடன் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதியில் உள்ள புதர்களை சுத்தம் செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.