தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கல்


ADDED : நவ 29, 2025 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி குமரன் நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில், மத்திய அரசின் பிரதமர் போஷன் திட்டத்தின் கீழ், திதிபோஜனம் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா துவக்கி வைத்தார்.

கவுன்சிலர்கள் சையத் யூசப், நாகராஜ், சாந்தலிங்கம், கவிதா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதில், மாணவர்களுக்கு சத்தான உணவு பரிமாறப்பட்டது.

மத்திய அரசு, பிரதமர் போஷன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு தினங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும். அதன்படி, உணவு வழங்கப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

* ஜக்கார்பாளையம் எம்.என்.எம். உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு நல்விருந்து நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முன்னாள் மாணவர் சதீஷ்குமாரின் மகள் ரித்திகாவின் பிறந்தநாளையொட்டி நல்விருந்து வழங்கப்பட்டது.

பள்ளி தாளாளர் கல்யாணசாமி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் முருகநாதன் ஒருங்கிணைத்தார். ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாணவி ேஹமமாலினி வரவேற்றார். மாணவர் ஸ்ரீஷரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us