/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 20, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி ஆல் தி சில்ரன்' அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள வழங்கப்பட்டது. பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) ரத்தினகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம், 24 உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு உரிமைகள் திட்ட தெற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜ், வடக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

