/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாலகத்துக்கு உபகரணங்கள் வழங்கல்
/
நுாலகத்துக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 09, 2025 10:01 PM
பொள்ளாச்சி; பொது நுாலகத்துறைக்கு சொந்தமான கிளை நுாலகம், பொள்ளாச்சி மரப்பேட்டையில், 12 சென்ட் இடத்தில் கடந்த, 1954ல் அமைக்கப்பட்டது. ஒரு லட்சம் நுால்கள், 16 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நுாலகமாக செயல்படுகிறது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் செயல்படும், 40 ஊர்ப்புற, பகுதிநேர மற்றும் கிளை நுாலகங்களின் ஊதிய மையமாகவும் உள்ளது. இந்த கிளை நுாலகத்துக்கு சொந்தமான பராமரிப்பில்லாத கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்படுகிறது.
நுாலகத்துக்கு சுவர் கடிகாரம், மின்விசிறிகள், ஆண்டாள் அறக்கட்ளை சார்பில் வழங்கப்பட்டது. ஆண்டாள் அறக்கட்டளை தலைவர் சாந்தலிங்கம், நுாலக அலுவலர் ெஷரிப், கவிஞர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.