/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி நாளில் பி.ஆர்.எஸ். முன்பதிவு அரை நாள்தான்
/
தீபாவளி நாளில் பி.ஆர்.எஸ். முன்பதிவு அரை நாள்தான்
ADDED : அக் 17, 2025 11:37 PM
கோவை: ரயில் பயணிகளுக்கான, கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பானது (பி.ஆர்.எஸ்), வரும் தீபாவளி தினத்தில், மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை நேரில் சென்று முன்பதிவு செய்ய, பி.ஆர்.எஸ்., கவுன்டர்கள் செயல்படுகின்றன. ரயில் நிலையங்கள், சில தபால் நிலையங்களில் இவை அமைக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இவை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2:00 மணி வரை மட்டும் செயல்படும்.
இந்நிலையில், வரும் தீபாவளி தினத்தில், சேலம் ரயில்வே கோட்டத்தில், பி.ஆர்.எஸ்.,கவுன்டர்கள், ஞாயிற்றுக்கிழமையைப் போல, மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.