/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., - ஜி.ஆர்.டி., அருங்காட்சியகம் நாளை திறப்பு
/
பி.எஸ்.ஜி., - ஜி.ஆர்.டி., அருங்காட்சியகம் நாளை திறப்பு
பி.எஸ்.ஜி., - ஜி.ஆர்.டி., அருங்காட்சியகம் நாளை திறப்பு
பி.எஸ்.ஜி., - ஜி.ஆர்.டி., அருங்காட்சியகம் நாளை திறப்பு
ADDED : ஏப் 23, 2025 06:39 AM
கோவை : பி.எஸ்.ஜி., - ஐடெக்., கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள, பி.எஸ்.ஜி., - ஜி.ஆர்.டி., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்,  நாளை (24ம் தேதி) திறக்கப்படுகிறது.
டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் நினைவாக நிறுவப்பட்டுள்ள இம்மையம், அறிவியல் ஆர்வலர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்பு, மொபிலிட்டி, இயற்பியல், விண்வெளி, ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் ரியாலிட்டி போன்ற பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என, பி.எஸ்.ஜி., கேர் இயக்குனர் ருத்ரமூர்த்தி தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது: கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், உலகத்தரத்தில் கோவையில் ரூ.40 கோடியில் அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. ரூ.18 கோடி மதிப்பிலான உபகரணங்கள் பி.எஸ்.ஜி., டெக் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்டுள்ளன.
வாரத்தின் ஏழு நாட்களும் அருங்காட்சியகம் திறந்திருக்கும். பள்ளி மாணவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.50, பெரியவர்களுக்கு ரூ.100. நாசாவின் வழிகாட்டுதலுடன் விண்வெளி மற்றும் வானியல் கேலரி, ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் மாதிரிகள், ஆக்மென்டட் ரியாலிட்டி வாயிலான விண்வெளி அனுபவம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ., ஆய்வகம், ஆட்டோமேஷன், இயந்திர கற்றல் மாதிரிகள், மெய்நிகர் ரியாலிட்டி அனுபவங்களும் கிடைக்கும். இவ்வாறு, தெரிவித்தார்.

