/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி. 75ம் ஆண்டு விழா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
பி.எஸ்.ஜி. 75ம் ஆண்டு விழா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பி.எஸ்.ஜி. 75ம் ஆண்டு விழா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பி.எஸ்.ஜி. 75ம் ஆண்டு விழா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜன 08, 2026 05:09 AM

கோவை: பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவின், ஒருபகுதியாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, கல்லூரி வளாகத்தில் நாளை முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 5,000க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்கின்றனர்.
நிருபர்களிடம் பி.எஸ்.ஜி., முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், '' முன்னாள் மாணவர்களான காசி கவுண்டன், வேலுசுவாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் 'மிஷன் கர்மயோகி பாரத்' தலைவருமான ராமதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.
பல துறைகளில் முன்னாள் மாணவர்கள் செய்த சாதனைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. 100 முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளும் வகையில், 'நாலேஜ் கனெக்ட்' நடக்கவுள்ளது.
சிறப்புப் பட்டிமன்றம், பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள், பொங்கல் கொண்டாட்டம், மாரத்தான், வாக்கத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்நிகழ்வில், பங்கேற்க விரும்புவோர் கல்லூரி வளாகத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

