/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., நூற்றாண்டு விழா 'லோகோ' வெளியீடு
/
பி.எஸ்.ஜி., நூற்றாண்டு விழா 'லோகோ' வெளியீடு
ADDED : ஜூலை 16, 2025 10:56 PM

கோவை; பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, லோகோ வெளியீட்டு விழா, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் சுப்பா ராவ், நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணனை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நூற்றாண்டு மற்றும் பிளாட்டினம் ஜூபிலி லோகோக்களை டி.ஆர்.டி.ஓ., முன்னாள் விஞ்ஞானியும், புனே டி.ஐ.ஏ.டி.,யின் முன்னாள் துணைவேந்தருமான பிரஹ்லாதா ராமாராவ் வெளியிட்டார்.
லோகோ வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்ற, என்.ஐ.டி., அகமதாபாத்தைச் சேர்ந்த சண்முகி மற்றும் மூர்த்தி ஆகியோருக்கு, அவர்களின் படைப்பாற்றல் பங்களிப்புகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பிரகாசன், ஐ.ஐ.டி., கவுஹாத்தியின் பேராசிரியர் உதயகுமார், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.