/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி.,கப் ஹேண்ட்பால் சக்தி கல்லுாரி சாம்பியன்
/
பி.எஸ்.ஜி.,கப் ஹேண்ட்பால் சக்தி கல்லுாரி சாம்பியன்
பி.எஸ்.ஜி.,கப் ஹேண்ட்பால் சக்தி கல்லுாரி சாம்பியன்
பி.எஸ்.ஜி.,கப் ஹேண்ட்பால் சக்தி கல்லுாரி சாம்பியன்
ADDED : பிப் 12, 2024 11:58 PM
கோவை;பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நடக்கும், மாநில அளவிலான ஹேண்ட்பால் இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., அணியை வீழ்த்தி, சக்தி கல்லுாரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 16ம் ஆண்டு மாநில அளவிலான ஹேண்ட்பால் போட்டி, கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், 14 அணிகள் லீக் முறையில் போட்டியிட்டன.
இதன் இறுதிப்போட்டிக்கு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணியும், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியும் தகுதி பெற்றன. விறுவிறுப்பாக நடந்த இறுதிப்போட்டியில், சக்தி கல்லுாரி அணி 21 - 13 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி., அணியை வீழ்த்தி, கோப்பையை தட்டிச்சென்றது.
இறுதிப்போட்டியில், சக்தி கல்லுாரி அணிக்கு அரவிந்த் 9 கோல் மற்றும் பி.எஸ்.ஜி., அணிக்கு யோகேஷ் நந்தகுமார் 5 கோல் அடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கம் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.