/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., அறக்கட்டளை 99வது நிறுவனர் நாள் விழா
/
பி.எஸ்.ஜி., அறக்கட்டளை 99வது நிறுவனர் நாள் விழா
ADDED : ஜன 25, 2025 11:03 PM

கோவை: பி.எஸ்.ஜி., அறக்கட்டளையின், 99வது நிறுவனர் நாள் விழா பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவமனை அரங்கில் நேற்று நடந்தது. நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்து, நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில், சமூக மேம்பாட்டிற்காக பங்களித்த மூன்று பேருக்கு, பி.எஸ்.ஜி., விஷ்வ சேவா ரத்னா விருதை, ஹெச்.சி.எல்., டெக் நிறுவன நிர்வாக இயக்குனர் விஜயகுமார் வழங்கி கவுரவித்தார்.
மருத்துவம் மற்றும் கல்வித்துறையின் கீழ் சிறப்பான செயல்பாட்டிற்காக திருவனந்தபுரம் பேலியேடிவ் சயின்ஸ்  இன்ஸ்டிடியூட் இயக்குனர் ராஜகோபால், டில்லி மேடாண்டா மருத்துவமனை தலைமை மருத்துவர் ரந்தீப் குலேரியா மற்றும்  பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி., சீனியர் பேராசிரியர் மற்றும் விஞ்ஞானி ஜெயந்த் ராமசாமி ஹரிஸ்சா ஆகிய மூவருக்கு, பி.எஸ்.ஜி., விஷ்வ சேவா ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதில், ஹெச்.சி.எல்., டெக் நிறுவன நிர்வாக இயக்குனர் விஜயகுமார்   ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் அதன் எதிர்கால பயன்பாடு குறித்து பேசினார்.   திருவனந்தபுரம் பேலியேடிவ் சயின்ஸ்   இன்ஸ்டிடியூட் இயக்குனர் ராஜகோபால், நோய் காரணமாக மரணவலியை அனுபவிப்பவர்களின் சூழல்கள் குறித்தும், தரமான சிகிச்சை முறைகளின் அவசியம் குறித்தும் பேசினார்.
பி.எஸ்.ஜி., குழும மருத்துவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

