/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ வல்லுனர்களுக்கு பி.எஸ்.ஜி. அளிக்கிறது கவுரவம்
/
மருத்துவ வல்லுனர்களுக்கு பி.எஸ்.ஜி. அளிக்கிறது கவுரவம்
மருத்துவ வல்லுனர்களுக்கு பி.எஸ்.ஜி. அளிக்கிறது கவுரவம்
மருத்துவ வல்லுனர்களுக்கு பி.எஸ்.ஜி. அளிக்கிறது கவுரவம்
ADDED : ஆக 24, 2025 06:28 AM
கோவை : நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சை, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த மருத்துவ சேவைகளில் முன்னோடியாக, பி.எஸ்.ஜி., ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் திகழ்கிறது.
இம்மையத்தின் ஐந்தாம் ஆண்டு விழா, நாளை (25ம் தேதி) நடக்கிறது. இந்தியாவில் புற்றுநோய் பராமரிப்பு துறையில் முன்னோடி பங்களிப்புகளைச் செய்த சிறந்த மருத்துவ வல்லுனர்களுக்கு, 'ஐகான் ஆப் கேன்சர் கேர்' என்ற விருது வழங்கப்பட உள்ளது.
கோல்கட்டா டாடா மெடிக்கல் சென்டர் முன்னாள் இயக்குனர் டாக்டர் மாம்மன் சன்னி, மங்களூர் யெனப்போயா பல்கலை துணைவேந்தர் விஜயகுமார், மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனை இயக்குனர் பிரமேஷ், அசாம் சில்சார் காசார் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் ரவி கண்ணன் ஆகியோருக்கு, விருதுகள் வழங்கப்பட உள்ளன.