தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மண்டல விளையாட்டு போட்டிகளில்  பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் சாம்பியன்

மண்டல விளையாட்டு போட்டிகளில்  பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் சாம்பியன்

மண்டல விளையாட்டு போட்டிகளில்  பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் சாம்பியன்


ADDED : பிப் 28, 2024 09:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 09:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : மண்டல அளவில் நடந்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில் கோவை மண்டல அளவில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்தாண்டுக்கான போட்டிகள், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி, சி.ஐ.டி., கல்லுாரி, இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி, நாராயணகுரு உள்ளிட்ட பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்தது.

இதில்,கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கல்லுாரி மாணவ மாணவியர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, பூப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள் பிரிவு குழு விளையாட்டு (170 புள்ளிகள்), தடகளம் (58 புள்ளிகள்) மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் (228) பட்டியல் என, அனைத்திலும் முதலிடம் பிடித்து அசத்தியது. மாணவியர் பிரிவில் குழு விளையாட்டில், கோவை அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லுாரி (180 புள்ளிகள்) முதலிடம் பிடித்தது.

தடகளத்தில் (59 புள்ளிகள்), ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டியலில் (194 புள்ளிகள்) எடுத்து பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.ஏ.ஏ., விளையாட்டு போட்டிகளை, கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us