பி.எஸ்.ஜி., டெக் 'மினி மராத்தான்' மாணவ, மாணவியர் பங்கேற்பு
பி.எஸ்.ஜி., டெக் 'மினி மராத்தான்' மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : மார் 19, 2024 12:29 AM

கோவை;பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரியில் நடந்த, மினி மராத்தான் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், 'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ், பி.எஸ்.ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான மினி மராத்தான் போட்டி, பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
போட்டியை, பி.எஸ்.ஜி., கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர்கள் பிரகாசன், கிரிராஜ், பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லுாரி இயக்குனர் ஸ்ரீவித்யா, காஞ்சனா ஆகியோர் உடனிருந்தனர். இதில் பி.எஸ்.ஜி., டெக், பாலிடெக்னிக், மேலாண்மை, ஐ.ஏ.எஸ்., (அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்) மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், சான்றிதழ்கள், பதக்கம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
