/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரியின் முன்னாள் மாணவர் சந்திப்பு நிறைவு

ADDED : ஜன 12, 2026 05:47 AM

கோவை: பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரியின், 75வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்புநிகழ்வு, நேற்று நிறைவடைந்தது.
மூன்றாம் நாளான நேற்று காலை, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்கத்தான், 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாரத்தான் நடைபெற்றது. 92 வயது முதியவர் உட்பட 400 பேர் ஆர்வமாக பங்கேற்றனர். தொடர்ந்து, முன்னாள் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில், கலைநிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னாள் மாணவர்கள் வயது வேறுபாடின்றி, பாடியும், ஆடியும், திறன்களை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். இறுதியாக மதியம் நடைபெற்ற நிறைவு விழாவில், விழாவை ஒருங்கிணைத்தவர்கள் மரியாதை, நன்றி தெரிவிக்கும் வகையில் கவுரவிக்கப்பட்டனர்.
இதில், முன்னாள் மாணவர் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், கல்லுாரி முதல்வர் பிரகாசன், கலை நிகழ்வுகள் ஒருங்கிணைப்பாளர் முத்துகுமரன், விழா ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.