/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இளைஞர்கள் முதலில் காதல் கவிதைகள்தான் எழுதுவார்கள்'
/
'இளைஞர்கள் முதலில் காதல் கவிதைகள்தான் எழுதுவார்கள்'
'இளைஞர்கள் முதலில் காதல் கவிதைகள்தான் எழுதுவார்கள்'
'இளைஞர்கள் முதலில் காதல் கவிதைகள்தான் எழுதுவார்கள்'
ADDED : ஜன 12, 2026 05:47 AM

கோவை: கோவை வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், 355வது இலக்கிய சந்திப்பு கூட்டம் மற்றும் கவிதை நுால் வெளியீடு விழா, லட்சுமி மில் அருகில் உள்ள கதிர்வேல் அரங்கில் நேற்று நடந்தது. கவிஞர் சண்முகம் தலைமை வகித்தார்.
கவிஞர் ஆதர்ஷ் ஆதித்யா எழுதிய, 'மவுனம் பேசியதே' என்ற கவிதை நுாலை பேராசிரியர் வேலுசாமி வெளியிட, முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர் இந்திராணி பெற்றுக்கொண்டார்.
நுாலை அறிமுகம் செய்த வக்கீல் சிவஞானம் பேசியதாவது:
தமிழ் இலக்கியம் படித்தவர்கள் பலர் ஏ.ஐ., தொழில்நுட்பம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் இந்த நுாலை எழுதிய ஆதர்ஷ் ஆதித்யா, ஏ.ஐ., தொழில்நுட்பம் படித்து விட்டு தமிழில் கவிதைகள் எழுதி வருகிறார்.
கவிதை எழுத துவங்கும் இளைஞர்கள் முதலில் காதல் கவிதைகள்தான் எழுதுவார்கள். ஆனால் இவர், காதல் கவிதைகளுடன் சேர்த்து சமூகம் சிந்தனை மற்றும் இயற்கை சார்ந்த கவிதைகளை நிறைய எழுதி இருக்கிறார். 'கண்ணீரில் பூவளர்த்து உன் கார்குழலில் சூடுவேன்' போன்ற கவிதை வரிகள் சிறப்பாக உள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.
நுாலாசிரியர் ஆதர்ஷ் ஆதித்யா ஏற்புரையாற்றினார்.எழுத்தாளர் முகில் தினகரன், கவிஞர் குமார், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

