/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., 'டிராபி' கூடைப்பந்து போட்டி; ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி அபாரம்

ADDED : ஜூலை 20, 2025 11:00 PM

கோவை; பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி கூடைப்பந்து அரங்கில், 'பி.எஸ்.ஜி., டிராபி', 9வது மாநில அளவிலான பொன் விழா ஆண்டு கூடைப்பந்து போட்டி கடந்த, 16 முதல், 20ம் தேதி வரை நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், கோவை, நீலகிரி, திருப்பூர், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 35 அணிகள் களம் இறங்கின.
யுனைடெட் பி.பி.சி., அணியும், ஜி.டி.என்., பி.பி.சி., அணியும் மோதின. யுனைடெட் அணியினர், 81-71 என்ற புள்ளிகளில் ஜி.டி.என்., அணியினரை வென்றனர். அடுத்து, சென்னை எஸ்.ஆர்.எம்., அணி, 61-53 என்ற புள்ளிகளில், பாரத் பி.பி.சி., அணியையும் வென்றனர்.
ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., பி.பி.சி., அணி, 68-50 என்ற புள்ளிகளில் அன்னுார் பி.பி.ஏ., அணியையும், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி, 86-75 என்ற புள்ளிகளில் குமரகுரு பி.பி.ஏ., அணியையும், எஸ்.ஆர்.எம்., அணி, 85-71 என்ற புள்ளிகளில் யுனைடெட் பி.பி.சி., அணியையும் வென்றன. நேற்று இரவு இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.