/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.பி.ஏ.ஏ., போட்டிகளில் புள்ளிகள் குவித்து டிராபி வென்றது பி.எஸ்.ஜி.,
/
ஐ.பி.ஏ.ஏ., போட்டிகளில் புள்ளிகள் குவித்து டிராபி வென்றது பி.எஸ்.ஜி.,
ஐ.பி.ஏ.ஏ., போட்டிகளில் புள்ளிகள் குவித்து டிராபி வென்றது பி.எஸ்.ஜி.,
ஐ.பி.ஏ.ஏ., போட்டிகளில் புள்ளிகள் குவித்து டிராபி வென்றது பி.எஸ்.ஜி.,
ADDED : ஏப் 07, 2025 05:37 AM
கோவை; ஐ.பி.ஏ.ஏ., போட்டிகளில் சிறந்த கல்வி நிறுவனத்துக்கான டிராபியை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி வென்றுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையே 'இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசியேசன்(ஐ.பி.ஏ.ஏ.,) போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. அதேபோல், மண்டலங்களுக்கு இடையே பால்பேட்மின்டன், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் இவ்விரு போட்டிகளிலும் ஆண்களுக்கான பிரிவில், பல்வேறு போட்டிகளில் அதிக புள்ளிகள் குவித்து, 2024-25ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவன டிராபியை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி வென்றுள்ளது. ஐ.பி.ஏ.ஏ., போட்டியில் மட்டும் ஆண்கள் அணி, 75 புள்ளிகளை பெற்றுள்ளது.
அதாவது, பால்பேட்மின்டன், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் முதலிடத்தையும், செஸ் போட்டியில் இரண்டாம் இடத்தையும், கூடைப்பந்து, ஹேண்ட்பால் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. மாநில தடகள போட்டியில், 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் நரேந்திரகுமார், பார்த்திவ், கோகுல் ஆனந்த், பால கண்ணன் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர்.
வெற்றி பெற்ற அணியினரை சமீபத்தில் நடந்த ஆண்டு விளையாட்டு விழாவில், கல்லுாரியின் முன்னாள் மாணவர் கார்த்திகேயன், முதல்வர் கிரிராஜ் உள்ளிட்டோர் கவுரவித்தனர்.

