/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு விரிவுரையாளர்களுக்கு உளவியல் சார்ந்த பயிற்சி
/
சிறப்பு விரிவுரையாளர்களுக்கு உளவியல் சார்ந்த பயிற்சி
சிறப்பு விரிவுரையாளர்களுக்கு உளவியல் சார்ந்த பயிற்சி
சிறப்பு விரிவுரையாளர்களுக்கு உளவியல் சார்ந்த பயிற்சி
ADDED : ஜூலை 03, 2025 09:36 PM

கோவை; கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் சிறப்பு விரிவுரையாளர்களுக்கு, கல்வி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை, உளவியல் பயிற்சி வகுப்பு, கோவையில் நேற்று துவங்கியது.
கோவை வேளாண் பல்கலையில் நேற்று துவங்கிய நிகழ்ச்சியில், கோவை வேல் அமிர்தம் எம்.எஸ்.எம்.இ., சமுதாயக் கல்லுாரி இயக்குனர் சிவா வரவேற்றார்.
அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள், பர்கூர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையங்கள், இலாங்குடி பாலிடெக்னிக் கல்லுாரி, ஆத்துார் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் மற்றும் குறிப்பிட்ட கூட்டுறவு மேலாண்மை நிலைய சிறப்பு விரிவுரையாளர்கள் என, தமிழகம் முழுவதும் இருந்து 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, கூட்டுறவுத் துறையால், பொதுமக்களுக்கு ஏற்படக் கூடிய பயன்கள், கல்வி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை, உளவியல் சார்ந்த நடவடிக்கை குறித்து, சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
கூட்டுறவு கல்வி நிறுவனங்களில் பயிலக் கூடிய மாணவர்கள், பலதரப்பட்ட பின்னணியில் இருந்து படிக்க வருகின்றனர். சிறந்த ஆசிரியர் என்பவர், தான் கூறக்கூடிய கருத்துகள், கடைசி நபரிடமும் சென்று சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவர். அவர்களுடைய வெற்றிக்கும் இதுதான் காரணமாக இருக்கும்' என, அறிவுறுத்தப்பட்டது.
கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, திண்டுக்கல் காந்திகிராம் கிராமப்புற நிறுவன, கூட்டுறவுத் துறை பேராசிரியர் பிச்சை உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பு இன்றும் நடக்கிறது.