/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் அருகே மதுக்கடை, பார்: இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு
/
கோவில் அருகே மதுக்கடை, பார்: இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு
கோவில் அருகே மதுக்கடை, பார்: இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு
கோவில் அருகே மதுக்கடை, பார்: இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு
ADDED : ஜன 04, 2024 12:34 AM
கோவை : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே மதுக்கடை மற்றும் பார் திறக்க, இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மனு கொடுத்தனர்.
கோவை அருகே பேரூரில் பட்டீஸ்வரர் கோவில், மாசாணியம்மன் கோவில் அருகருகே உள்ளன. இதன் அருகே அரசு அனுமதி பெற்றிருப்பதாக கூறி, பார் வசதியுடன் கூடிய மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அப்பகுதி பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.
கோவிலுக்கு அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்து மக்கள் கட்சி மாவட்ட பொது செயலாளர் சந்தோஷ் தலைமையில் அக்கட்சியினர், கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலாவிடம், நேற்று மனு கொடுத்தனர்.
அதன்பின், இந்து மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமுருகன் கூறியதாவது:
பேரூரில் கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகே, பார் வசதியுடன் கூடிய மதுக்கடை அமைக்க, அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது, ஆன்மிகத்துக்கு எதிரானது; பண்பாடு, கலாசாரத்துக்கு எதிரானது. பார் வசதியுடன் கூடிய மதுக்கடை அமைக்க, கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
'மதுவை ஒழிப்போம்; போதை வஸ்துகளை இரும்புக்கரம் கொண்டு அறவே ஒழிப்போம்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருக்கிறார். 'மதுக்கடைகளை கொஞ்சம், கொஞ்சமாக குறைப்போம்' என, அமைச்சர் தரப்பில், மக்கள் மன்றத்தில் தெரிவிக்கின்றனர்.
ஆனால், புதிய கடைகளுக்கு அனுமதி தருவதை, மக்களை ஏமாற்றும் செயல். கண்டனம் தெரிவிக்கிறோம். எப்எல்2 மதுக்கடை திறப்பதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.