/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் பாதிப்பு
/
திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் பாதிப்பு
திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் பாதிப்பு
திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேற்றம் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : மே 13, 2025 11:58 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி - ஜோதிநகர் இடையிலான ரோட்டில், வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி அருகே, ஜோதிநகர், மாக்கினாம்பட்டி பகுதிகளில், குடியிருப்பு வீடுகளின் கட்டுமானம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், வீதிகளில், மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சில வீடுகளில் இருந்து, திறந்தவெளியில் கழிவுநீர் வெளியற்றப்படுகிறது. அவ்வகையில், மாக்கினாம்பட்டி - ஜோதிநகர் இடையிலான ரோட்டில், வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர். குறிப்பாக, கழிவுநீர் பல நாட்களாக, வழிந்தோடியதால் ரோடும் சேதமடைகிறது. அதேபோல, தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
வீடுகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நிலத்தடியில் 'ரிங்' அமைத்தும், ஓடக்கல் அடுக்கியும், கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது. பல வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங்காங்கே குழிகள் தோண்டி தேக்கியும் வைக்கப்படுகிறது. சில இடங்களில் கழிவுநீர் தெருவில் வெளியேற்றப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
உரிய முறையில் கால்வாய்களை அமைத்து குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேற, உள்ளாட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.