/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
/
ரயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : செப் 03, 2025 11:18 PM
கோவை ; ஒண்டிப்புதுார் சூர்யா நகர் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி, அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து குடியிருப்போர் சங்கத்தினர், பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
சூர்யா நகர் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடவு எண்: 3 ரயில்வே கேட் அமைந்துள்ளது. ரயில்வே கேட் பாதையை பயன்படுத்தி, சிவலிங்கபுரம், காமாட்சி நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்று வருகின்றனர்.
இப்பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
அங்கு மேம்பாலம் கட்டாமல், ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடினால், பொதுமக்கள் மூன்று கி.மீ தொலைவில் உள்ள ரயில்வே கேட்டை பயன்படுத்த வேண்டும்.
பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். இப்பிரச்னைக்கு தீர்வாக மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.