/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மையத்தடுப்பு அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
/
மையத்தடுப்பு அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 21, 2025 10:22 PM

பொள்ளாச்சி; நெகமம், கருமாபுரம் பகுதி மக்கள் பொள்ளாச்சி --- பல்லடம் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.
பொள்ளாச்சி - பல்லடம் ரோடு விரிவாக்க பணிகள், கடந்த சில மாதங்களாக நடக்கிறது. இதில், கருமாபுரம் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்ட மையத்தடுப்பால், அப்பகுதி மக்கள் ரோட்டைக் கடந்து செல்ல இரண்டு முதல் நான்கு கி.மீ., வரை சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், மக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மையத்தடுப்பை அகற்றம் செய்யக்கோரியும், நிழற்கூரை மற்றும் ஊர் பெயர்பலகை அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் ஊர் மக்கள் சார்பில் முறையிட்டும் எந்த பயனும் இல்லாததால், நேற்று, மக்கள் ஒன்றிணைந்து பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் கருமாபுரம் பிரிவு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த நெகமம் போலீசார், பொள்ளாச்சி தாசில்தார் வாசுதேவன், சுல்தான்பேட்டை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜேஷ், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மக்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்பகுதியில் ரோட்டில் உள்ள மையத்தடுப்பை அகற்றம் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு, மக்கள் கலைந்து சென்றனர்.