/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்; பொதுமக்கள் புகார்
/
12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்; பொதுமக்கள் புகார்
12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்; பொதுமக்கள் புகார்
12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர்; பொதுமக்கள் புகார்
ADDED : ஜன 20, 2025 10:55 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், முறையான குடிநீர் வினியோகம் இல்லாததால் மிகுந்த சிரமமாக உள்ளதாக, லட்சுமி கணபதி நகர் மக்கள் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி நகராட்சியையொட்டி அமைந்துள்ளது சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி. இங்கு தனி குடிநீர் திட்டம் செயல்படுத்தியும் போதுமான அளவுக்கு குடிநீர் வினியோகம் இல்லை என, பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
பேரூராட்சிக்கு உட்பட்ட, லட்சுமி கணபதி நகர் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
லட்சுமி கணபதி, அருள்ஜோதிநகர் பகுதியில், 100 குடும்பங்கள் உள்ளன. இங்கு சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த, இரண்டு ஆண்டுகளாக சரியாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. 12 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லாததால், குடிநீருக்காக அலைமோத வேண்டிய நிலை உள்ளது.
இப்பகுதியில் வசிப்போர் முறையாக சொத்துவரி, குடிநீர் வரியை பேரூராட்சி நிர்வாகத்துக்கு செலுத்தி வருகிறோம்.மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டுமென கடந்தாண்டு சப் - கலெக்டர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகத்திலும் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் மனு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

