தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போர்வெல் குழாய் அகற்ற  பொதுமக்கள் கோரிக்கை

 போர்வெல் குழாய் அகற்ற  பொதுமக்கள் கோரிக்கை

 போர்வெல் குழாய் அகற்ற  பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஏப் 19, 2026 03:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 03:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறையில், சாலையில் அமைக்கப்பட்ட போர்வெல் குழாயை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகராட்சி சார்பில், 10 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பல்வேறு இடங்களில் போர்வேல் அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை குழாயில் தண்ணீர் வருவதில்லை.

இந்நிலையில், வால்பாறை நகர் வாழைத்தோட்டம் செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் குழாய் பயன்பாடுத்த முடியாமல் காட்சிப்பொருளாக உள்ளது.

பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட போர்வெல் பயன்பாடின்றி உள்ளது. இதனால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்கள் நிறுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத போர்வெல் குழாயை அகற்ற வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us